நெல்லையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செவிலியர்களுக்கான புதிய சீருடையை மாற்ற வேண்டும்.  சம ஊதியம் வழங்க வேண்டும்.  இடமாறுதல் ஆணை பெற்றும் 8  மாதங்களாக விடுவிப்பு இல்லாத செவிலியர்களை உடனே அனுப்பி வைக்க வேண்டும்.  ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.  பணியில் சேர்ந்த நாள் முதல்  நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆஷா அலிஸ் மாதரசி தலைமை வகித்தார்.  மாவட்ட துணைத் தலைவர் எஸ். ஸ்ரீதேவி தொடக்கவுரையாற்றினார்.  மாநில பொதுச்செயலர் சுபின்,  மாவட்ட ஆலோசகர் ரூத் டேவிட்,  மாவட்டச் செயலர் க.சரஸ்வதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.பார்த்தசாரதி,  பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கா.கற்பகம், மார்த்தாண்ட பூபதி,  மு.சுப்பு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். வட்டச் செயலர் வசந்தமாலை நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com