பாளையங்கோட்டை  மார்க்கெட் பகுதியில் கரும்பு விற்பனைக்கு அனுமதி மறுப்பு: வியாபாரிகள் அவதி

பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள ஜவாகர் மைதானத்தில் கரும்பு விற்பனை செய்ய

பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள ஜவாகர் மைதானத்தில் கரும்பு விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மிகுந்த அவதிக்குளாகியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோரும் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள ஜவாகர் மைதானத்தில் கரும்பு விற்பனைக்காக தனித்தனி கடைகள் மாநகராட்சியால் அமைக்கப்படும். 
ஆனால், நிகழாண்டில் இந்தக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கரும்பு வியாபாரிகள் செய்வதறியாது திகைக்கின்றனர். 
இதனால் இங்கு விற்பனைக்காக கரும்பு ஏற்றி வந்த லாரிகள் புறநகர் பகுதிகளிலே நிற்கின்றன. லாரிகளில் இருந்தே வியாபாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கரும்பு வியாபாரி ஒருவர் கூறியது: ஜவாகர் மைதானத்தில் கடந்த ஆண்டு சுமார் 40 கடைகள் அமைக்கப்பட்டன. தற்போது இங்கு கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை நம்பி நாங்கள் கொண்டு வந்த கரும்புகளை லாரியில் வைத்தவாறே விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இதனால் கரும்பு லாரிகள் வரத்து குறைந்து, கரும்பு விலையும் அதிகரிக்கக் கூடும். தற்போது ஒரு கரும்பு ரூ. 40-க்கு விற்பனை செய்கிறோம். இதே நிலை நீடித்தால் ஒரு கரும்பின் விலை ரூ.100-க்கு செல்லும் நிலை ஏற்படும்.
 மாநகராட்சி தனியாக இடம் ஒதுக்கி கொடுத்தால் விற்பனை செய்ய உதவியாக இருக்கும். பொதுமக்களும் கரும்புக்காக அலைய வேண்டிய நிலை இருக்காது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com