ஆழ்வார்குறிச்சி முப்பிடாதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

ஆழ்வார்குறிச்சி நடுத்தெரு ஸ்ரீ முப்பிடாதி அம்மன் கோயிலில் முதலாமாண்டு வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.


ஆழ்வார்குறிச்சி நடுத்தெரு ஸ்ரீ முப்பிடாதி அம்மன் கோயிலில் முதலாமாண்டு வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
 இதையொட்டி,  கணபதி பூஜை,  ஹோமம், பூர்ணாஹுதி, நடைபெற்றது. தொடர்ந்து  பகல் 12  மணிக்கு விமானங்கள் மற்றும் ஸ்ரீ முப்பிடாதி அம்மன், பரிவார தேவதைகளுக்கு   கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.  இதில், திரளான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.
  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர்,  உபயதாரர்கள் மற்றும் கொடை விழாக் கமிட்டி தலைவர் ஆ.சை.மாணிக்கம், துணைத் தலைவர் குமார், செயலர் ந.சுப்பிரமணியமன், துணைச் செயலர்கள் ஆ.குமரேசன், ந.நல்லபெருமாள், பொருளாளர் ப.மந்திரமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

விநாயகர் கோயிலில்...அம்பாசமுத்திரம், ஜூலை 13 : ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் அருகில்உள்ள வரம் தரும் விநாயகர் கோயில் நான்காமாண்டு வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 8.45 மணிக்கு மஹா கணபதி பூஜை மற்றும் ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 10.35 மணிக்கு பூர்ணாஹுதி,  அபிஷேகமும்,  முற்பகல் 11.15 மணிக்கு கும்பாபிஷேகமும், 11.30 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. 
தொடர்ந்து மாலை 5.50 மணிக்கு திரு விளக்கு பூஜை மற்றும் புஷ்பாஞ்சலியும்,  இரவு 7.35 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். 
யாகம் மற்றும் பூஜைகளை செ.அப்புநாதம் சிவம் செய்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழு மற்றும் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com