நெல்லையில் 103 டிகிரி வெயில்
By DIN | Published On : 01st June 2019 07:05 AM | Last Updated : 01st June 2019 07:05 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
திருநெல்வேலியில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. அக்னி நட்சத்திரத்தின் உச்ச கட்டமாக கடந்த செவ்வாய்க்கிழமை 107 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. அக்னி நட்சத்திரம் புதன்கிழமையுடன் முடிவடைந்த போதிலும், வெயிலின் தாக்கம் இன்னமும் குறையவில்லை.
வியாழக்கிழமை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவான நிலையில், வெள்ளிக்கிழமையும் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. கடும் வெப்பத்தின் காரணமாக காலை 11 முதல் மாலை 4 மணி வரை மாநகரின் பிரதான சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் ஆங்காங்கே கானல் நீர் தென்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான வெயிலால் முடங்கியது.