திருமலைக்கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜை தொடங்கியது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை மங்கள இசை, மூர்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், ப்ரஸன்னாபிஷேகம், பரிவாரமூர்த்திகள் கலாகர்ஷணம், அக்னி சங்கிரகணம் நடைபெற்றது. மாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், ஆச்சார்ய ரக்ஷபந்தனம், கும்ப அலங்காரம், மூலவர் கலாகர்ஷணம், யாத்ராதானம், கடம் யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை, பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. இதில் ராஜகோபுர மற்றும் திருப்பணி உபயதாரர்கள் அருணாசலம், பரமேஸ்வரி, தனுஷ் எம். குமார் எம்.பி., கோயில் உதவி ஆணையர் அருணாசலம், கடையநல்லூர் நகர அதிமுக செயலர் கிட்டு ராஜா, நகர எம்ஜிஆர் மன்ற செயலர் எம்.கே.முருகன், மாவடிக்கால் லிங்கம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஜூன் 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜையும், காலை 9.20 முதல் 10.20-க்குள் ராஜகோபுரம்,விமானங்கள், திருமலைக்குமாரசுவாமி முதலாகிய ஸமஸ்த தேவ, தேவியர்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com