சுந்தரனார் பல்கலை. கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் ஒரு பாடம் தேர்ச்சி பெறாதவர்களுக்கு 28-ஆம் தேதி சிறப்பு துணைத் தேர்வு

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திக்கு உள்பட்ட  கல்லூரிகளில் எம்சிஏ மற்றும் முதுநிலை கலை,  அறிவியல்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திக்கு உள்பட்ட  கல்லூரிகளில் எம்சிஏ மற்றும் முதுநிலை கலை,  அறிவியல் பாடங்களில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி சிறப்பு துணைத் தேர்வு நடைபெறுகிறது.
 இது தொடர்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சே.சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட கல்லூரிகளில் 2016-17-ஆம் ஆண்டில்
 எம்சிஏ படிப்பில் சேர்ந்து, 2019 ஏப்ரலில் இறுதித் தேர்வெழுதியவர்கள், 2017-18-இல் முதுநிலை கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்ந்து 2019-இல் இறுதித் தேர்வெழுதியவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இம்மாதம் 28-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு துணைத் தேர்வு நடைபெறவுள்ளது.
   கல்லூரிகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கல்வி ஆண்டிற்கு முன்னர் பயின்ற தனித்தேர்வர்களுக்கு அனுமதி கிடையாது. முதுநிலை மாணவர்கள் வியாழக்கிழமை (ஜூன் 13) முதல் 18-ஆம் தேதி வரை ‌w‌w‌w.‌m‌s‌u‌n‌i‌v.​a​c.‌i‌n என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுக்கட்டணம் ரூ.1000.  கட்டணத்தை இணையதளம் மூலமே செலுத்த வேண்டும். 
சிறப்புத் தேர்வை எழுதும் மாணவர்கள் அதற்குரிய அனுமதி சீட்டை ஜூன் 24-ஆம் தேதி  ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படும். சிறப்பு துணைத் தேர்வு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com