நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம்: 2 பேர் கைது

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த போது வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த போது வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை 2 பேரக் கைது செய்த போலீஸார் 17 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு-கோட்டையூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் அருண்குமார் (39).
இவருக்கு சொந்தமான மாட்டுப் பண்ணை ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ளது. வியாழக்கிழமை இரவு இந்த பண்ணையில் சிலர் சட்டவிரோதமாக  நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். அப்போது மூலப்பொருள்களை கலக்கும் போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த  இதே பகுதியைச்  சேர்ந்த முனியாண்டி மகன் அழகர்சாமி (26), மக்காளி (30) ஆகியோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த அழககர்சாமிக்கு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்  மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் காயமடைந்த மக்காளி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத்தொடர்ந்து வத்திராயிருப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை இப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெடிவிபத்து நடைபெற்ற பகுதியில் இருந்து 9 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஆனந்தன் என்பவரது தோட்டத்தில் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விருதுநகரிலிருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இதுதொடர்பாக வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் அருண்குமார் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து இதேபகுதியைச் சேர்ந்த  சங்கீஸ்வரன், குருவையா ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வருகிறார்கள். வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com