கணினி பயிற்றுநர் தேர்வு: 642 பேர் எழுதினர்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய கணினி பயிற்றுநர் பணிக்கான தேர்வை, திருநெல்வேலி மாவட்டத்தில் 5 மையங்களில் 642 பேர்


திருநெல்வேலி: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய கணினி பயிற்றுநர் பணிக்கான தேர்வை, திருநெல்வேலி மாவட்டத்தில் 5 மையங்களில் 642 பேர் எழுதினர். 
  ஆன்-லைன் முறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தேர்வு திருநெல்வேலி மாவட்டத்தில் லெவிஞ்சிபுரம் கேப் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,  வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரி, மேல திடியூர் பிஎஸ்என் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி ரேஸ் கல்வி மையம், ஆலங்குளம் தூய மரியம் பாலிடெக்னிக் ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது. 742 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 642 பேர் தேர்வு எழுதினர். முதன்முறையாக ஆன்லைன் மூலம் இத் தேர்வு நடைபெறுவதால் தேர்வு குறித்து தேர்வர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காக காலை 8.30 மணிக்கே வரவழைக்கப்பட்டனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. 
இது குறித்து திருநெல்வேலி மையத்தில் தேர்வு எழுதியவர்கள் கூறுகையில், சில கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது. ஆன்லைன் தேர்வு ஒரு புதிய அனுபவமாக இருந்தது என்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com