அம்பை தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம்
By DIN | Published On : 04th March 2019 07:45 AM | Last Updated : 04th March 2019 07:45 AM | அ+அ அ- |

அம்பை தமிழ் இலக்கியப் பேரவை மாதக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பேரவைத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். சே.குருசாமி முன்னிலை வகித்தார். முருகசாமிநாதன் இறைவாழ்த்துப் பாடினார். புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்கள் மற்றும் சேரன்மகாதேவி தமிழ்ப் பேரவை மதிப்பியல் தலைவர் இ.ம.கணபதி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. செயலர் லட்சுமணன் சென்ற கூட்ட அறிக்கை மற்றும் வரவு செலவு வாசித்தார். அ.சண்முகசுந்தரம் குறள் விளக்கம் கூறினார். திருவருள் லத்திப் இன்றைய சிந்தனை வழங்கினார்.
"எண்ணமே வாழ்வின் ஏணிப்படிகள்' என்ற தலைப்பில் புவனேஸ்வரி மழலை உரையும், பெண்மையைப் போற்றுவோம் என்ற தலைப்பில் ஜன்னத் பிர்தவ்ஸ் இளைஞர் உரையும் ஆற்றினர். நளவெண்பாவின் நயம் என்ற தலைப்பில் மணிமுருகன் சிறப்புரை வழங்கினார்.
சிவபார்வதி, பாரத் ஆகியோர் கவிதை வாசித்தனர். கே.என்.ஷேக் பீர்முஹம்மது இன்னிசை வழங்கினார். கலையரசு வரவேற்றார். நாறும்பூநாதன் நன்றி கூறினார். ராஜசேகரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.