தென்காசி மக்களவைத் தொகுதி பிரதானப் பிரச்னைகளுக்கு முன்னுரிமைப்படி தீர்வு: திமுக வேட்பாளர் உறுதி

தென்காசி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாசுதேவநல்லூர் பேரவைத் தொகுதி திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் சிவகிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.


தென்காசி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாசுதேவநல்லூர் பேரவைத் தொகுதி திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் சிவகிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக மேற்கு மாவட்டச் செயலர் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிகளை ஒன்றியச் செயலர் பொன். முத்தையாபாண்டியன் தொகுத்து வழங்கினார்.கூட்டத்தில் திமுக வேட்பாளர் தனுஷ் எம். குமார் பேசும்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் முதல் தென்காசி வரையுள்ள பிரச்னைகளை அறிவேன். நான் வெற்றிபெற்றால், அப்பிரச்னைகள் குறித்து உங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்பேன். திருமங்கலம்- செங்கோட்டை நான்குவழிச் சாலைத் திட்டத்தைப் பொருத்தவரை, விவசாயிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றார்.
கூட்டத்தில், திமுக முன்னாள் எம்.பி. எஸ். தங்கவேலு, மாநில தீர்மானக் குழு உறுப்பினர் ப.ஆ. சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி. சீனிவாசன், தொழிலதிபர் எஸ். அய்யாத்துரைபாண்டியன், மாவட்டத் துணைச் செயலர்கள் கோ. மாடசாமி, ரஜப் பாத்திமா, மாவட்டப் பொருளாளர் சேக்தாவூது, மாவட்ட அவைத் தலைவர் எஸ்.கே. முத்துப்பாண்டியன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் அப்துல்காதர், மாவட்ட நிர்வாகிகள் வழக்குரைஞர் எம்.பி.கே. மருதப்பன், வே. மனோகரன், நகரச் செயலர்கள் டாக்டர் எஸ்.எஸ். செண்பகவிநாயகம், செல்வகுமார், கேடிசி குருசாமி, ஆ. சரவணன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அன்புமணிகணேசன், சிறுபான்மை அணி மாநிலத் துணைத் தலைவர் ரசாக், கட்சி நிர்வாகிகள் எஸ். பழனிநாடார், என். திருஞானம், எஸ்.எஸ். பண்டாரம், சங்கை கணேசன் (காங்கிரஸ்), முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலைக்குமார், தி.மு. ராஜேந்திரன், கிருஷ்ணகுமார் (மதிமுக), எம். தங்கவேலு (இந்திய கம்யூனிஸ்ட்), டி. கணபதி (மார்க்சிஸ்ட்), செய்யது சுலைமான் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), முகமது நயினார், எம்.எஸ். அப்துர்ரஹ்மான்(மமக), ராஜ்குமார்(விடுதலைச் சிறுத்தைகள்), சந்திரசேகர் (தமிழ்ப்புலிகள்), கலிவரதன் (ஆதித்தமிழர் பேரவை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com