முக்கூடல் உச்சினி மாகாளி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா
By DIN | Published On : 24th March 2019 01:05 AM | Last Updated : 24th March 2019 01:05 AM | அ+அ அ- |

முக்கூடல் உச்சினிமாகாளி அம்பாள், சந்தனமாரி அம்பாள் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா 3 தினங்கள் நடைபெற்றது.
கடந்த 14 ஆம் தேதி கால் நாட்டு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை கணபதி ஹோமம் மற்றும் விமானம் வருஷாபிஷேகமும், மாலையில் தாமிரவருணி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், அக்னி சட்டி ஏந்தி ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது. இரவில் அம்பாள் மாகாப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க, கும்பம் ஏற்றி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
வியாழக்கிழமை காலையில் தாமிரவருணி நதிக்கரையில் இருந்து பால்குடம் எடுத்து வருதலைத் தொடர்ந்து உச்சிகால பூஜை, தீச்சட்டி ஏந்தி கோயில் வலம் வருதல் நடைபெற்றது. இரவு சாமக் கொடையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு படப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை மாடன் சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் டி.எஸ்.ஏ சிவப்பிரகாசம் மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.