மருத்துவ விழிப்புணர்வு: கடையநல்லூர் மருத்துவருக்கு விருது
By DIN | Published On : 06th May 2019 05:00 AM | Last Updated : 06th May 2019 05:00 AM | அ+அ அ- |

மருத்துவ வசதி கிடைக்காத ஏழைகளுக்கு மருத்துவ சேவையாற்றிய கடையநல்லூர் மருத்துவர் மூர்த்தி சிறந்த மருத்துவருக்கான விருதை பெற்றுள்ளார்.
காது கேளாதோர் நலம், குழந்தைகள் நலம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து சிறப்பான சேவையாற்றியமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
வேலூரில் நடைபெற்ற அரிமா கூட்டு மாவட்ட பத்தாவது மாநாட்டில் , அரிமா உடனடி முன்னாள் ஆளுநர் சுந்தர்ராஜன் முன்னிலையில், கூட்டு மாவட்டத் தலைவர் விஜயகுமார் இவ்விருதை, அரிமா மாவட்டத் தலைவர் மருத்துவர் மூர்த்திக்கு வழங்கினார். மருத்துவர் மூர்த்தியை, மாவட்ட அரிமா ஆளுநர் பிரகாஷ் , ஆளுநர் (தேர்வு) முருகன், துணை ஆளுநர்கள் (தேர்வு) ஜஸ்டின்பால், ஜெகந்நாதன் மற்றும் குற்றாலம் விக்டரி அரிமா தலைவர் தெய்வநாயகம், செயலர் கனகராஜ்குமார், பொருளாளர் வெங்கடேஸ்வரன் முன்னாள் தலைவர்கள் ஆடிட்டர் நாராயணன், கணேசமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.