தேசியம்பட்டி கோயிலில் இன்று பூக்குழி திருவிழா

தேசியம்பட்டி என்ற நாரணபுரம் அருள்மிகு ராஜ ராஜேஸ்வரி வடகாசி அம்மன் கோயில் 19ஆவது ஆண்டு பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை (மே 7) நடைபெறவுள்ளது.

தேசியம்பட்டி என்ற நாரணபுரம் அருள்மிகு ராஜ ராஜேஸ்வரி வடகாசி அம்மன் கோயில் 19ஆவது ஆண்டு பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை (மே 7) நடைபெறவுள்ளது.
 தேசியம்பட்டி தேவர் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயில் பூக்குழித் திருவிழாவையொட்டி, கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி நாள்கால் ஊன்றப்பட்டது. திங்கள்கிழமை மாலையில் வாசுதேவநல்லூர் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் இருந்து தீர்த்தக்குடம் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளானோர் பங்கேற்றனர்.  
 முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் வைபவம் 10ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும். முன்னதாக அன்னதானமும், நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை, புதன்கிழமை(மே 8)காலை 10 மணிக்கு பொங்கலிடுதல், அதைத் தொடர்ந்து கிடா வெட்டுதல் நடைபெறும். மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டும், 6 மணிக்கு முளைப்பாரி கரைத்தலைத் தொடர்ந்து, இரவில் வில்லிசைக் கச்சேரி நடைபெறும். ஏற்பாடுகளை, தேசியம்பட்டி  பொதுமக்கள், விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com