திருவேங்கடம் வெடி விபத்து: மேலும் ஒருவர் பலி
By DIN | Published On : 18th May 2019 09:30 AM | Last Updated : 18th May 2019 09:30 AM | அ+அ அ- |

திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலத்த காயமடைந்த மேலும் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
திருவேங்கடம் அருகே வரகனூரில் ஏற்கெனவே வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலை அருகே தனியார் நிலத்தில் கருவேல மரங்களை வெட்டும் பணி கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. அங்கு சமையல் செய்தபோது, காற்றில் தீப்பொறி பரவி, சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலை அறையில் விழுந்ததில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், கோபால், குருசாமி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாங்குடியைச் சேர்ந்த கனகராஜ் (46) என்பவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.