நெல்லையில் 104 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் திங்கள்கிழமை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

திருநெல்வேலியில் திங்கள்கிழமை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
திருநெல்வேலியில் கடந்த 2 மாதங்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ச்சியாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 99 டிகிரி ஃபாரன்ஹீட்டாக பதிவானது. 
அதைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவான நிலையில், திங்கள்கிழமை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. கடுமையான வெயில் காரணமாக மதியவேளைகளில் மாநகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com