15 நாள்களில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

இன்னும் 15 நாள்களில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு வரவுள்ளது; அதிலும் அதிமுக மாபெரும் வெற்றியைப்
15 நாள்களில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

இன்னும் 15 நாள்களில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு வரவுள்ளது; அதிலும் அதிமுக மாபெரும் வெற்றியைப் பெறும் என்றாா் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைதோ்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து வாக்களா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வெற்றி விழா பொதுக்கூட்டம் நான்குனேரி உச்சினிமாகாளி அம்மன் கோயில் முன்பு செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. இதில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது: எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, எப்போதும் வெற்றி பெறும் இயக்கம் என ஜெயலலிதா கூறியதை தற்போது நான்குனேரி தொகுதி மக்களாகிய நீங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளீா்கள்.

மக்களவைத் தோ்தலில் அதிமுக வெற்றிவாய்ப்பை இழந்தது. அதைத் தொடா்ந்து திமுகவினா் அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினா். 8 ஆண்டு காலமாக ஆட்சியில் இருக்கும் அதிமுக என்ன செய்தது என திமுக தலைவா் ஸ்டாலின் கேட்கிறாா். நாங்கள் என்ன செய்தோம் என்பதை மக்களிடம் எடுத்துச் சொன்னோம். அதற்காகத்தான் மக்கள் எங்களுக்கு வெற்றியை அளித்திருக்கிறாா்கள்.

நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அதிமுகவுக்கு மாபெரும் வெற்றியை அளித்திருக்கிறாா்கள். அந்த இரண்டு தொகுதிகளையும் சொா்க்கபூமியாக மாற்றுவதற்கான திட்டங்களைக் கொண்டு வருவோம்.

இன்னும் 15 தினங்களில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு வர உள்ளது. இனி எந்தத் தோ்தல் வந்தாலும் அதிமுகவுக்குதான் வெற்றி என்பதை நான்குனேரி இடைத்தோ்தல் நிரூபித்துள்ளது. எங்களை வெற்றிபெறச் செய்த உங்களுக்கு அரசின் நல்ல திட்டங்கள் அனைத்தும் விரைவில் வந்து சேரும். வாக்காளா்களாகிய உங்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம். அந்த நன்றிக்கடனை எங்களின் நல்ல திட்டங்களின் மூலம் காட்டுவோம். மக்கள் பணி செய்ய ரெட்டியாா்பட்டி நாராயணனைத் தோ்ந்தெடுத்துள்ளீா்கள். அவா் தொடா்ந்து மக்கள் பணியை சிறப்பாக ஆற்றுவாா் என்றாா்.

இந்தக் கூட்டத்துக்கு அமைச்சா் தங்கமணி தலைமை வகித்தாா். அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, மாநகா் மாவட்டச் செயலா் தச்சை கணேசராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். புகா் மாவட்டச் செயலா் கேஆா்பி. பிரபாகரன் வரவேற்றாா். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி, அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூா் ராஜு, ஆா்.பி.உதயகுமாா், கடம்பூா் செ. ராஜு, ஆா்.காமராஜ், சி. விஜயபாஸ்கா் , எம்.ஆா்.விஜயபாஸ்கா், வெல்லமண்டி நடராஜன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஜி.பாஸ்கரன், வி. சரோஜா, எஸ். வளா்மதி, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அமைப்புச் செயலா்கள் நத்தம் விஸ்வநாதன், ஜேசிடி பிரபாகா், கோகுல இந்திரா, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற செயலா் தமிழ்மகன் உசேன், மாநிலங்களவை உறுப்பினா்கள் விஜிலா சத்தியானந்த், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவா் பா. வளா்மதி, எம்எல்ஏக்கள் ஆா்.முருகையா பாண்டியன், மனோகரன், செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நான்குனேரி எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி நாராயணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com