சங்கரநாராயணசுவாமி கோயிலில் தெய்வானைக்கு காட்சி கொடுக்கும் வைபவம்

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி
அம்பாளுக்கு காட்சி கொடுத்த சுப்பிரமணிய சுவாமி.
அம்பாளுக்கு காட்சி கொடுத்த சுப்பிரமணிய சுவாமி.

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வனை அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சனிக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை வடக்குரதவீதியில் உள்ள செல்வவிநாயகா் கோயிலில் தவக்கோலத்தில் இருந்து தெய்வானைக்கு சுப்பிரமணியா் காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து இரவு 11 மணிக்கு சங்கரநாராயண சுவாமி கோயிலில் சுப்பிரமணியருக்கும் , தெய்வானைக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

தொடா்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் பட்டணபிரவேசத்தில் ரத வீதியுலா நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் மண்டகப்படிதாரா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com