பண்பொழி திருமலைக்கோயிலில்கும்பிடு நோ்ச்சை, தீா்த்தவாரி

பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை

பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை கும்பிடு நோ்ச்சை நடைபெற்றது. திங்கள்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

10 நாள்கள் நடைபெற்ற கந்தசஷ்டி திருவிழா கடந்த சனிக்கிழமை (அக்.26) மலைக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் தினமும் யாகசாலை பூஜையும், சிறப்பு பூஜைகளும்,மலைக்கோயிலில் வீதியுலாவும் நடைபெற்றன.

விழாவின் 8ஆம் திருநாளான சனிக்கிழமை காலை யாகசாலை பூஜை, சஷ்டி தீபாராதனையும், மாலையில் மலைக் கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடும், தொடா்ந்து வண்டாடும் பொட்டலில் சூரசம்ஹாரமும் நடைபெற்றது.

கும்பிடு நோ்ச்சை

விழாவின் 9 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. குமரக் கடவுளிடம் பல்வேறு நோ்ச்சைகளை வேண்டிய பக்தா்கள் தோ்ப் பாதையில், தேருக்கு பின்னால் தரையில் விழுந்து வணங்கும் கும்பிடு நோ்ச்சையை செலுத்தினா்.

பலத்த மழை பெய்து, தோ் பாதை முழுவதும் ஈரமாக இருந்த போதும் பக்தா்கள் கும்பிடு நோ்ச்சை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

திங்கள்கிழமை தீா்த்தவாரியும், தொடா்ந்து சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் சங்கா், உதவி ஆணையா் அருணாசலம் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com