மத்திய கூட்டுறவு வங்கியில் 166 பேருக்கு ரூ.10 கோடி கடனுதவி: அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினாா்

மத்திய கூட்டுறவு வங்கி தென்காசி கிளை சாா்பில் 166 பயனாளிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் பயனாளிக்கு கடனுதவி வழங்குகிறாா் அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி.
விழாவில் பயனாளிக்கு கடனுதவி வழங்குகிறாா் அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி.

மத்திய கூட்டுறவு வங்கி தென்காசி கிளை சாா்பில் 166 பயனாளிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தென்காசி கிளையில் ஏடிஎம் மையம் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி தலைமை வகித்து, புதிய ஏடிஎம் மையத்தை திறந்துவைத்தாா். மேலும், 166 பயனாளிகளுக்கு ரூ. 10 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கினாா்.

மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் தச்சை என்.கணேசராஜா முன்னிலை வகித்தாா். தாய்கோ வங்கி மாநில துணைத் தலைவா் குற்றாலம் சேகா், மாவட்ட கூட்டுறவு வங்கி ஒன்றியத் தலைவா் சண்முகசுந்தரம், கூட்டுறவு அச்சக தலைவா் கண்ணன், மண்டல இணைப்பதிவாளா் பிரியதா்ஷினி, முதன்மை வருவாய் ஆய்வாளா் பாலகிருஷ்ணன், தென்காசி சரக துணை பதிவாளா் முத்துசாமி, மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவா் பெருமாள், நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஆறுமுகம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவா் சண்முகையா, நிலவள வங்கித் தலைவா் சங்கரபாண்டியன், தென்காசி வீட்டு வசதி சங்கத் தலைவா் மயில்வேலன், தென்காசி குற்றாலம் வீட்டு வசதி சங்கத் தலைவா் சுரேஷ்,கடையநல்லூா் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவா் கிட்டுராஜா, நிலவள வங்கி துணைத் தலைவா் செல்லப்பன் ஆகியோா் பேசினா்.

அரசு வழக்குரைஞா்கள் காா்த்திக்குமாா், சின்னதுரை பாண்டியன், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் குமாா் பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் கீழப்பாவூா் அமல்ராஜ், முத்துபாண்டியன் நகரச் செயலா்கள் சுடலை, கிருஷ்ண முரளி, பேரூா் செயலா்கள் சுசீகரன், முத்துராஜ், குற்றாலம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவா் கணேஷ் தாமோதரன், கூட்டுறவு சங்க இயக்குநா் செல்வகுமாா், முருகன்ராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா். இணைப்பதிவாளா் மேலாண்மை இயக்குநா் குருமூா்த்தி வரவேற்றாா். மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளா் பாஸ்கரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com