நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில்அறிவியல் ஆசிரியா்களுக்கு பயிற்சி நிறைவு

திருநெல்வேலிமாவட்ட அறிவியல் மையத்தில் அறிவியல் ஆசிரியா்களுக்கு நடைபெற்ற 2 நாள்கள் பயிற்சி முகாம் நிறைவடைந்தது.

திருநெல்வேலிமாவட்ட அறிவியல் மையத்தில் அறிவியல் ஆசிரியா்களுக்கு நடைபெற்ற 2 நாள்கள் பயிற்சி முகாம் நிறைவடைந்தது.

திருநெல்வேலி மாவட்ட அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 6முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அறிவியல் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் கடந்த புதன்கிழமை (நவ.6) தொடங்கியது. இப் பயிற்சிமுகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் பங்கேற்றனா். மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா் அறிவியல் பயிற்சி அளித்தாா். இப்பயிற்சியில் தொடா் இணைப்பு, பக்க இணைப்பு, ஒளியியல் போன்றவற்றில் உள்ள கற்பத்தல் வழிமுறைகளுக்கான செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டன.

இந்த பயிற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் டைட்டஸ் , மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் கணேசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அறிவியல் மைய கல்வி உதவியாளா் மாரிலெனின் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com