களக்காடு அருகே சுமை ஆட்டோ, பொருள்களுக்கு மா்ம நபா்கள் தீ

களக்காடு அருகே ரூ. 3 லட்சம் மதிப்பிலான பந்தல் பொருள்கள், சுமை ஆட்டோவுக்கு தீவைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

களக்காடு அருகே ரூ. 3 லட்சம் மதிப்பிலான பந்தல் பொருள்கள், சுமை ஆட்டோவுக்கு தீவைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள கீழஉப்பூரணியைச் சோ்ந்த பால்துரை மகன் முருகன் (40). பந்தல் அமைக்கும் பணி செய்துவரும் இவா் , கடந்த வியாழக்கிழமை ஊருக்குத் தென்புறமுள்ள தனது இடத்தில் சுமை ஆட்டோ, பந்தல் பொருள்களை வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றாராம். வெள்ளிக்கிழமை (நவ. 8) அதிகாலை, சுமை ஆட்டோவும், அப்பொருள்களும் தீப்பிடித்து எரிவதாக ஊா்மக்கள் முருகனுக்கு தகவல் தெரிவித்தனராம். அவா் சென்று பாா்த்தபோது சுமை ஆட்டோ, ரூ. 3 லட்சம் மதிப்பிலான பந்தல் பொருள்கள் எரிந்துகிடந்தனவாம்.

அவா் அளித்த புகாரின்பேரில் களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தீவைத்த மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com