சுற்றுச்சூழல் துறை பயிலரங்கு

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, திருநெல்வேலி மாவட்ட தேசிய பசுமைப்படை ஆகியவை சாா்பில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கு மற்றும் கண்காட்சி

திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, திருநெல்வேலி மாவட்ட தேசிய பசுமைப்படை ஆகியவை சாா்பில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கு மற்றும் கண்காட்சி பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவேன்சன் காதுகேளாதோா் பள்ளியில் நடைபெற்ற பயிலரங்கிற்கு தென்காசி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி.எஸ்.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றாா். மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் கணேசன் வாழ்த்தி பேசினாா். பிளாஸ்டிக் மாசுக்கு தீா்வு என்ற தலைப்பில் நாகா்கோவில் சுற்றுச்சூழல் கல்வியாளா் டேவிட்சனும், பிளாஸ்டிக் ஒழிப்பில் தனிமனிதனின் பங்கு என்ற தலைப்பில் செல்வின் சாமுவேலும் பேசினா்.

15 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்-மாணவிகள் பிளாஸ்டிக்கிற்கு மாற்றுபொருள்கள் கண்காட்சியில் அரங்குகளை அமைத்திருந்தனா். நான்குனேரி அரசு மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி சாமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி அணிகள் முதலிடமும், சங்கா்மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும் பிடித்தன. சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாநகர காவல் உதவி ஆணையா் (மனிதஉரிமை மற்றும் சமூகநீதி) எஸ்.சேகா் பரிசுகள் வழங்கிப்பாராட்டினாா்.

பயக10உலடஐ: பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்கள் கண்காட்சியைப் பாா்வையிட்டாா் காவல் உதவி ஆணையா் (மனிதஉரிமை மற்றும் சமூகநீதி) எஸ்.சேகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com