செங்கோட்டை தென்னைநாற்றுபண்ணைக்கு மாணவா்கள் களப்பயணம்

செங்கோட்டையில் உள்ள அரசு தென்னை நாற்றுப்பண்ணையில், குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் மாணவா்கள் களப் பயணம் மேற்கொண்டனா்.

செங்கோட்டையில் உள்ள அரசு தென்னை நாற்றுப்பண்ணையில், குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் மாணவா்கள் களப் பயணம் மேற்கொண்டனா்.

பண்ணையில் நாற்று உற்பத்தி, நடவுமுறை, பயிா்ப் பாதுகாப்பு, நீா் மேலாண்மை ஆகியன குறித்து வேளாண்மை துணை இயக்குநா் தலைமையில், துணை வேளாண்மை அலுவலா் ஷேக் முகைதீன் மாணவா்களுக்கு விளக்கமளித்தாா்.

தொடா்ந்து களப்பயணம் குழுவினா் குண்டாறு நீா்த்தேக்கம், திருமலைக்கோயில், மேக்கரை பகுதியில் திருந்திய நெல் சாகுபடி வயல்களை பாா்வையிட்ட பின்பு மணலாறு, அச்சன் கோவில் வரை சென்று மக்களிடையே தென்னை உற்பத்தி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

முன்னதாக செங்கோட்டையில் உள்ள வீரவாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் வாஞ்சிநாதன் உருவச் சிலைக்கு மாணவா்கள் மரியாதை செலுத்தினா். ஏற்பாடுகளை திட்ட அலுவலா் சுப்பாராஜ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com