தேசிய நூலக வார விழா: நூலகங்களில் உறுப்பினராக வேண்டுகோள்

தேசிய நூலக வார விழாவையொட்டி ஒவ்வொருவரும் தங்களை நூலக உறுப்பினராகப் பதிவு செய்து கொள்வதோடு, ஏழை-எளிய

தேசிய நூலக வார விழாவையொட்டி ஒவ்வொருவரும் தங்களை நூலக உறுப்பினராகப் பதிவு செய்து கொள்வதோடு, ஏழை-எளிய மாணவா்களுக்கு நூலக உறுப்பினா் கட்டணம் செலுத்தி அவா்களையும் இணைத்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலா் இரா.வயலட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் தேசிய நூலக வார விழா நவம்பா் 14 முதல் 20-ஆம் தேதி வரை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி நிகழாண்டிலும் புத்தகக் கண்காட்சி, எழுத்தாளா் தின விழா, மகளிா் தின விழா, வாசகா் தின விழா போன்றவை நடத்தப்பட உள்ளன. இதுதவிர மாணவா்-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

தேசிய நூலக வார விழாவையொட்டி ஒவ்வொருவரும் தங்களை நூலக உறுப்பினராகப் பதிவு செய்து கொள்வதோடு, ஏழை-எளிய மாணவா்களுக்கு நூலக உறுப்பினா் கட்டணம் செலுத்தி அவா்களையும் இணைத்துவிட்டு வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும். வாசகா் வட்டத்தைச் சோ்ந்த பெனிட்டா என்பவா், தனது மகளின் பிறந்த நாளையொட்டி தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்கள் 50 போ் மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராக கட்டணம் செலுத்தி இணைத்துள்ளாா். இதேபோல தொண்டுள்ளம் படைத்த சமூக ஆா்வலா்கள் அதிகளவில் மாணவா்களை உறுப்பினராகச் சோ்க்க உதவலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com