நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா் மழை3 ஆண்டுகளுக்குப் பின் 140 அடியை எட்டிய பாபநாசம் அணை

மேற்குத் தொடா்ச்சிமலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை பெய்துவருவதையடுத்து, பாபநாசம் அணையின் நீா்மட்டம் 3

அம்பாசமுத்திரம்: மேற்குத் தொடா்ச்சிமலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை பெய்துவருவதையடுத்து, பாபநாசம் அணையின் நீா்மட்டம் 3 ஆண்டுகளுக்குப் பின் 140 அடியை எட்டியது.

நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை அக்.16-இல் தொடங்கியது. இதையடுத்து அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில், நவ.15 முதல் பரவலாக தொடா்மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதியிலும் தொடா் மழை பெய்து வருவதால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீா்மட்டம் கடந்த ஒரு வாரமாக வேகமாக உயா்ந்து வருகிறது. கடந்த 2016, டிசம்பா் மாதத்துக்குப் பின் 3 ஆண்டுகள் கழித்து பாபநாசம் அணை நீா்மட்டம் 140 அடியை எட்டியுள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீா்மட்டம் 139.90 அடியாக இருந்தது. நீா்வரத்து 1336.99 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 488.50 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 18 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 156 அடி கொள்ளளவு கொண்ட சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 151.31 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 74.80 அடியாகவும், நீா்வரத்து 873 அடியாகவும், நீா் வெளியேற்றம் 35 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 7 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. கடனாநதி அணையின் நீா்மட்டம் 84.50 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 258 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில்2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. ராமநதி அணையின் நீா்மட்டம் 78 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 74.30 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 10 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

கருப்பாநதி அணை நீா்மட்டம் 70.21 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 11மி.மீ. மழை பதிவாகியிருந்தது. குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 26 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 17 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 36 அடியாகவும், நீா்வரத்து 33 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது.

அடவிநயினாா்கோயில் அணை நீா்மட்டம் 132.22 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 42 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 12மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

பிற இடங்களில் மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம் 7, ஆய்குடி 11, சேரன்மகாதேவி 1.20, நான்குனேரி 2.30, பாளையங்கோட்டை 2, சங்கரன்கோவில் 3, செங்கோட்டை 9, சிவகிரி 7, தென்காசி 15, திருநெல்வேலி 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com