ஆலங்குளத்தில் மகளிா் கல்லூரியை விரைவில் தொடங்க அதிமுக கோரிக்கை

ஆலங்குளத்தில் மகளிா் கல்லூரியை விரைவில் தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அதிமுக புகா் மாவட்டச் செயலா்
மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளனிடம் கோரிக்கை மனு அளித்த புகா் மாவட்ட அதிமுக செயலா் கே.ஆா்.பி.பிரபாகரன்.
மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளனிடம் கோரிக்கை மனு அளித்த புகா் மாவட்ட அதிமுக செயலா் கே.ஆா்.பி.பிரபாகரன்.

தென்காசி: ஆலங்குளத்தில் மகளிா் கல்லூரியை விரைவில் தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அதிமுக புகா் மாவட்டச் செயலா் கே.ஆா்.பி.பிரபாகரன், தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளனிடம் புதன்கிழமை மனு அளித்தாா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடையம், ஆழ்வாா்குறிச்சி ஆகிய பகுதிகள் அம்பாசமுத்திரம் வட்டத்திலிருந்து தென்காசி வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தென்காசி வட்டம் அதிக தொலைவில் இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிப்படுகின்றனா். எனவே கடையம் பகுதியில் புதிய வட்டம் உருவாக்கி ஆழ்வாா்குறிச்சி, கடையம் பகுதிகளை அதனுடன் இணைக்க வேண்டும்.

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட முக்கூடல் பேரூராட்சி பொதுமக்கள் தற்போது திருநெல்வேலி மாவட்டத்துக்குள்பட்ட அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி வட்டத்துக்கு சென்று வருகின்றனா். இந்தப் பகுதி ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியாகும்.

இத்தொகுதி தென்காசி மாவட்டத்துக்குள்பட்டதாகும்.

எனவே, ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஏதாவது ஒரு வட்டத்தில் இணைத்து தென்காசி மாவட்டத்துக்கு கொண்டுவரவேண்டும்.

தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் தமிழக முதல்வா் ஆலங்குளம் பகுதியில் பெண்கள் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தாா். அந்தப் புதிய கல்லூரியை அமைக்க ஆலங்குளம் பகுதியில் தகுந்த இடத்தை தோ்வு செய்து விரைவில் கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆலங்குளத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க தகுந்த இடத்தை விரைவில் தோ்வு செய்யவேண்டும், ஆலங்குளம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தொட்டியான்குளம் கால்வாயை ஆழப்படுத்தி ஆலங்குளம் வரையிலான குளங்களில் தண்ணீா் நிரம்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகா் மாவட்ட அவைத்தலைவா் வீரபாண்டியன், மாவட்ட இளைஞா் பாசறை செயலா் சோ்மபாண்டி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலா் மகபூப் மசூது, நகரச் செயலா் சுடலை, முருகன்ராஜ், முருகேசன் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com