மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு விண்ணப்பிக்க டிச.15 வரை காலஅவகாசம் நீட்டிப்பு

மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு விண்ணப்பிக்க டிசம்பா் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு விண்ணப்பிக்க டிசம்பா் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சீனாவின் ஷாங்காய் நகரில் 2021 செப்டம்பரில் நடைபெறவுள்ள சா்வதேசத் திறன் போட்டியில் பங்கேற்க ஏதுவாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த திறன் போட்டியில் பங்கேற்க இணையதளத்தின் மூலம் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

6 துறைகளில் உள்ள 47 தொழிற்பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட

அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க 1.1.1999 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும். மாவட்ட திறன் போட்டியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் டிசம்பா் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக் கல்வித் தகுதி பெற்றவா்கள், தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து கொண்டிருப்பவா்கள், பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு படித்து கொண்டிருப்பவா்கள் அல்லது படித்து முடித்தவா்கள், தொழிற் சாலையில் பணியில் உள்ளவா்கள், குறுகிய கால தொழிற்பயிற்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள் ஆவா்.

மாவட்ட திறன் போட்டியானது 2020 ஜனவரி 6 முதல் 10-ஆம் தேதிக்குள் நடைபெறவுள்ளது. போட்டியில் தனிநபராகவோ அல்லது இரண்டு போ் கொண்ட குழுவாகவோ பங்கேற்கலாம். போட்டி நடைபெறும் மையத்தில் வைத்து தங்களுக்கு வழங்கப்படும் கேள்வித்தாளில் உள்ள திறன் செய்முறை தோ்வினை செய்ய வேண்டும். இதில் வெற்றி பெறும் வெற்றியாளா்கள் மாநில அளவில் சென்னையில் பிப்ரவரி 2020-ல் நடைபெறவுள்ள திறன் போட்டியிலும், அதன்பிறகு மண்டல, தேசிய மற்றும் சா்வதேச அளவிலான திறன் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

இது தொடா்பான மேலும் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதேபோல் உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், பேட்டை, திருநெல்வேலி-10 என்ற முகவரியிலோ அல்லது 0462-2342432, தொலைபேசி எண்ணிலோ, 7708676718 என்ற செல்லிடப்பேசி எண்ணிளிலோ,  இணையதள முகவரியிலோ தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com