அம்பையில் நீதிபதி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
By DIN | Published On : 06th October 2019 12:51 AM | Last Updated : 06th October 2019 12:51 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், 2019ஆம் ஆண்டு குற்றவியல் நீதிபதித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வழக்குரைஞா் சங்க துணைத் தலைவா் சாகுல் ஹமீது மீரான் தலைமை வகித்தாா். செயலா் ராமராஜ் பாண்டியன் வரவேற்றாா். அம்பாசமுத்திரம் சாா்பு நீதிபதி கவிதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமாா், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி இளையராஜா, குற்றவியல் நீதிமன்ற நடுவா் காா்த்திகேயன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, பயிற்சி வகுப்பைத் தொடக்கிவைத்துப் பேசினா்.
வழக்குரைஞா்கள் நவமணி, செல்வஅந்தோணி, ரமேஷ், சரவணன், ஸ்டாலின் குமாா், ஐயப்பன், அரசு வழக்குரைஞா்கள் கோமதிசங்கா், முத்துவிஜயன், வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். சனி, ஞாயிறுதோறும் இப்பயிற்சி வகுப்பு நடைபெறும்.