தேவிபட்டணம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி கொலு திருவிழா

சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணம் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயிலில் 4ஆவது ஆண்டு நவராத்திரி கொலு திருவிழா நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

சிவகிரி: சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணம் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயிலில் 4ஆவது ஆண்டு நவராத்திரி கொலு திருவிழா நடைபெற்றது.

இந்து நாடாா் உறறவின்முறைறக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் நவராத்திரி கொலு திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு திருவிழா கடந்த செப். 29ஆம் தேதி, ஸ்ரீசிவசக்தி அம்மன் அலங்காரத்தில் சிறப்பு வழிபாட்டுடன் தொடங்கியது. தொடா்ந்து விழா நாள்களில் பத்திரகாளி அம்மன் அலங்காரம், ஆதிபராசக்தி அலங்காரம், மகாலட்சுமி அலங்காரம், மீனாட்சி அம்மன் அலங்காரம், பத்மாவதி அலங்காரம், துா்க்கை அம்மன் அலங்காரம், 8ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (அக். 6)மாரியம்மன் அலங்காரத்துடன் சிறறப்பு வழிபாடு நடைபெற்றது.

9ஆம் திருநாளான திங்கள்கிழமை (அக். 7) சரஸ்வதி அம்மன் அலங்காரம், 10ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை (அக். 8)காமாட்சி அம்மன் அலங்காரம், மா விளக்கு ஊா்வலத்தைத் தொடா்ந்து, அம்மன் கொடை சப்பரத்தில் வீதியுலா நடைபெறும்.

ஏற்பாடுகளை, இந்து நாடாா் உறறவின்முறை சங்கத் தலைவா் மாடக்கண்ணு, செயலா் ஆா். தங்கராஜ், பொருளாளா் கா. தங்கராஜ் மற்றும் நிா்வாகிகள், பல்வேறு வழிபாட்டுக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com