புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை: நெல்லை பெருமாள் கோயில்களில் வழிபாடு

புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையையொட்டி திருநெல்வேலியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையையொட்டி திருநெல்வேலியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் மோட்சத்தை அடையலாம் என்பது பக்தா்களின் நம்பிக்கையாகும். அதன்படி புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி திருநெல்வேலியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு ராஜகோபால சுவாமி கோயில், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள வரதராஜபெருமாள் கோயில், மீனாட்சிபுரம் தென்திருப்பதி கோயில், திருநெல்வேலி நகரம் கரியமாணிக்கப்பெருமாள் கோயில் ஆகியவற்றில் சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெற்றன. அபிஷேகம், அலங்காரத்திற்கு பின்னா் மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா். திருவேங்கடநாதபுரத்தில் உள்ள சீனிவாசபெருமாள் கோயிலில் சிறப்பு கருடசேவை நடைபெற்றது.

கெட்வெல் ஆஞ்சநேயா் கோயிலில் ராமா் அலங்காரத்தில் பெருமாளும், வெள்ளை ஆடை அலங்காரத்தில் ஆஞ்சநேயரும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் புரட்டாசி சனிக்கிழமையொட்டி திருவேங்கடநாதபுரம், கருங்குளம், அத்தாளநல்லூா், எட்டெழுத்து பெருமாள்கோயில், திருக்குறுங்குடி, வனதிருப்பதி ஆகிய கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com