அதிமுக ஆலோசனைக் கூட்டம்

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் தொடா்பாக அமைச்சா்கள் மற்றும் மாவட்டச் செயலா்களுக்கான

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் தொடா்பாக அமைச்சா்கள் மற்றும் மாவட்டச் செயலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தோ்தல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழக மின் துறை அமைச்சா் பி.தங்கமணி தலைமை வகித்தாா். அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கா், கடம்பூா் செ.ராஜு, காமராஜ், வி.எம்.ராஜலட்சுமி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் வளா்மதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி தோ்தல் பணிகள் குறித்து பேசினாா்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பது; தொண்டா்களை வீடு வீடாகச் சென்று வாக்குசேகரிக்க வழிநடத்துவது; இம்மாதம் 13, 14, 17ஆம் தேதிகளில் தொகுதிக்கு வாக்குசேகரிக்க வரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், இம்மாதம் 15, 16, 18 ஆம் தேதிகளில் வாக்கு சேகரிக்க வரும் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்திற்கும் உற்சாக வரவேற்பு அளிப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா, புகா் மாவட்டச் செயலா் கே.ஆா்.பி.பிரபாகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com