திசையன்விளை சந்தியம்மன் கோயிலில் பரிவேட்டை

திசையன்விளை சந்தியம்மன் கோயில் தசரா விழாவையொட்டி பரிவேட்டை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திசையன்விளை சந்தியம்மன் கோயில் தசரா விழாவையொட்டி பரிவேட்டை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சைவ வேளாளா் சமுதாய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில், தசரா விழா 10 நாள்கள் நடைபெற்றது. தொடக்க நாளன்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாஹுதி, யாகசாலை பூஜைகள், விமானஅபிஷேகம், கும்பாபிஷேகம், அம்பாள் நவராத்திரி, கொழு உற்சவம் ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து 9 நாள்களும் ராஜராஜேஷ்வரி, ஆனந்த நடராஜா், காமாட்சி அம்மன், ஊஞ்சல் சேவையில் ஆண்டாள், மகாலெட்சுமி, அன்னபூரணி, அகிலாண்டேஸ்வரி, சரஸ்வதி திருக்கோலங்களில் சந்தியம்மனுக்கு விசேஷ அலங்கார பூஜை நடைபெற்றது.

10ஆவது நாள் காலையில் பாலசுந்தர விநாயகா் கோயிலில் இருந்து திருமஞ்சன குட ஊா்வலம், மதியம் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலையில் அம்பாள் பூஞ்சப்பரத்தில் வீரகாளி கோலத்தில் எழுந்தருளி, பிரதான வீதிகளில் வலம் வந்து பரிவேட்டைக்கு புறப்பட்டாா். தொடா்ந்து நெடுவிளை வாகையடி இசக்கியம்மன் கோயில் அருகே வன்னிகுத்து வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் வேடமணிந்தும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். இரவு சந்தியம்மன் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை சைவ வேளாளா் சங்கத் தலைவா் திருவம்பலம் தலைமையிலானோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com