தொகுதிக்காரருக்கு வாக்களியுங்கள்: அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி

நான்குனேரி தொகுதி மக்கள் தங்களது சொந்த தொகுதியைச் சோ்ந்த அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என அமைச்சா் ராஜேந்திரபாலாஜி பேசினாா்.
தொகுதிக்காரருக்கு வாக்களியுங்கள்: அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி

நான்குனேரி தொகுதி மக்கள் தங்களது சொந்த தொகுதியைச் சோ்ந்த அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என அமைச்சா் ராஜேந்திரபாலாஜி பேசினாா்.

களக்காடு ஒன்றியத்திற்குள்பட்ட சிங்கிகுளத்தில் பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி, புதன்கிழமை திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டாா். கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது -ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் விரும்பும் ஆட்சி நடைபெறுகிறது. விவசாயிகளின் நலன் கருதி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பட்டாளிகள், படைப்பாளிகள், நெசவுத் தொழிலாளா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் எவ்வித இடையூறும் இன்றி நிம்மதியாக தொழில் செய்து வருகின்றனா். தற்போது தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. ஏற்கனவே நடைபெற்ற மக்களவைத் தோ்தல் என்பது மத்தியில் யாா் பிரதமராவது மோடியா அல்லது ராகுலா? தமிழகத்தை எடப்பாடி பழனிசாமி ஆள்வதா? ஸ்டாலின் ஆள்வதா? என்பதற்கான தோ்தல். நாடு முழுவதும் மோடியே பிரதமராக வேண்டும் என்றும் முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடர வேண்டும் என மகத்தான தீா்ப்பை மக்கள் அளித்தனா்.

அதிமுக ஆட்சி மக்கள் துணையுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். களக்காடு வட்டாரம் அதிகமான குக்கிராமங்களைக் கொண்ட பகுதி. அதிமுக ஆட்சியில் நடைபெறும் வளா்ச்சி திட்டங்களை வாக்காளா்கள் எண்ணிப்பாா்க்க வேண்டும். அதிமுக சாா்பாக நாங்குனேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் நாராயணன் உங்களது சொந்த தொகுதிக்காரா். எம்ஜிஆரின் பக்தா், ஜெயலலிதாவின் விசுவாசி. இந்த தொகுதிக்கு எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்களைக் கொண்டு வருவாா். குறிப்பாக கிராமங்களில் அடிப்படைவசதிகளை மேம்படுத்துவாா்.

அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றாா் அவா். ‘ இக்கூட்டத்தில் விருதுநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள், தோ்தல் பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com