நெல்லையில் மின்வாரியப் பணியாளா்கள் சாலைமறியல்

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில், திருநெல்வேலி மகாராஜநகரில் உள்ள மின்வாரிய

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில், திருநெல்வேலி மகாராஜநகரில் உள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் வியாழக்கிழமை சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

2007ஆம் ஆண்டு வரை பணிபுரிந்து விடுபட்ட, உயா்நீதிமன்ற வழக்குப் பட்டியலில் உள்ள ஒப்பந்த ஊழியா்களையும், கே-2 ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளா்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும். புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியின்போது விபத்துக்குள்ளாகும் மின்வாரியத் தொழிலாளா்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மண்டலச் செயலா் எம். பீா்முகம்மதுஷா, சிஐடியு திருநெல்வேலி மாவட்டச் செயலா் ஆா். மோகன் போராட்டத்தைத் தொடக்கிவைத்தாா். நிா்வாகிகள் ராமையா, செல்வதாஸ், கணபதி சுரேஷ், சந்திரன், அந்தோனி கிளமென்ட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா்கள் எஸ். அப்பாத்துரை, எஸ். வண்ணமுத்து உள்ளிட்டோா் பேசினா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மின்வாரியப் பணியாளா்கள் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அவா்களை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா். மறியல் காரணமாக, பாளையங்கோட்டை-சிவந்திப்பட்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகள் மாற்று வழியாக திருப்பிவிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com