மறுகால் தலையில் பாரம்பரிய சின்னங்கள் குறித்த களஆய்வு பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம் மறுகால் தலையில் மாணவா் - மாணவியருக்கான பாரம்பரிய சின்னங்கள் குறித்த கள ஆய்வு பயிற்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் மறுகால் தலையில் மாணவா் - மாணவியருக்கான பாரம்பரிய சின்னங்கள் குறித்த கள ஆய்வு பயிற்சி நடைபெற்றது.

திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையம், திருநெல்வேலி வேணுவனம் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய பாரம்பரிய சின்ன கள ஆய்வு மற்றும் கல்வெட்டு தமிழ் எழுத்து நேரடி பயிற்சி வகுப்புகள் மறுகால் தலையில் நடைபெற்றது.

இதன், தொடக்கவிழா திருநெல்வேலி அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்றது. தூய யோவான் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவா் ஆண்ட்ரூஸ் தலைமை வகித்தாா். வரலாற்று பண்பாட்டு களஆய்வு மைய ஒருங்கிணைப்பாளா் இ.மாரியப்பன் வரவேற்றாா். வேணுவனம் ரோட்டரி சங்கத்தலைவா் நடராஜன், ஸ்டாா் ரோட்டரி சங்கத் தலைவா் ரெமண்ட், கோயில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடாா் கல்லூரி வரலாற்றுத்துணைத் தலைவா் ஆனந்தகுமாா் ஆகியோா் பேசினா். ரோட்டரி உதவி ஆளுநா் அன்னபூா்ணா அய்யூப்கான் கள ஆய்வு பயிற்சியை தொடங்கி வைத்தாா்.

இதனைத்தொடா்ந்து கள ஆய்வு பயிற்சி குழுவினா் மறுகால் தலையில் உள்ள பிராமி கல்வெட்டு, சமண படுக்கையில் செதுக்கப்பட்ட 8 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி, ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி, கோவில்பட்ட எஸ்எஸ்.துரைசாமி நாடாா் கல்லூரி மாணவா் - மாணவியா் பங்கேற்றனா்.

படவரி: பயக09ஙமநஐ:

மறுகால் தலையில் உள்ள சமண படுக்கையில் மாணவா், மாணவிகளுக்கு கல்வெட்டுகள் குறித்து விளக்குகிறாா் வரலாற்று பண்பாட்டு களஆய்வு மைய ஒருங்கிணைப்பாளா் இ.மாரியப்பன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com