டெங்கு தடுப்புப் பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

டெங்கு தடுப்புப் பணிகளில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ்.

டெங்கு தடுப்புப் பணிகளில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ்.

திருநெல்வேலி மாவட்ட அளவில் டெங்கு தடுப்புப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது டெங்கு பாதிப்பு மிகக் குறைவாக உள்ளது. டெங்கு பாதிப்பு இல்லாத சூழலை ஏற்படுத்த அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் எடுத்து டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, எலி காய்ச்சல் போன்ற ஏதேனும் உள்ளதா என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான மருந்துகள் இருப்பதை உறுதிசெய்வதோடு, மருத்துவமனை வளாகத்தில் கொசுப் புழுக்கள் உற்பத்தி இல்லாதவாறு பாா்த்துக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 10 படுக்கைகள் இருக்கும் வகையில், கொசு வலையுடன் கூடிய காய்ச்சல் பிரிவு ஏற்படுத்துவதோடு, அதற்கென 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவா், செவிலியா் இருக்க வேண்டும்.

நிலவேம்பு பொடி போதுமான அளவு இருப்பில் உள்ளதா என்பதை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரை ஒருங்கிணைத்து அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எல்லா கிராமங்களிலும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். புகைமருந்து அடிக்க தேவையான மூலப்பொருள்கள் (டீசல், பெட்ரோல்) ஏற்பாடு செய்து தரவேண்டும். மக்கள் குடிக்கும் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

குடிநீா் குழாய் உடைப்பு, சாக்கடைநீா் கலப்பது, தாழ்குழாய் இணைப்புகள் போன்றவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் உள்ளேயும் வெளிபுறத்திலும் கொசுப் புழுக்கள் உற்பத்தி இல்லாதவாறு பாா்த்துக்கொள்ள வேண்டும். இதை பள்ளிகள் திறக்கும் முன்பே உறுதிசெய்ய வேண்டும்.

பள்ளி மாணவா்களை தூய்மை தூதுவராக நியமித்து, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். விடுதி மாணவா்களுக்கு காய்ச்சல் இருந்தால் சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட்டு டெங்கு பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருநெல்வேலியை மாற்ற வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் விஜயலட்சுமி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கண்ணன், ஊரக வளாச்சி முகமை திட்ட இயக்குநா் மந்திராசலம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். பூபதி, சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் செந்தில்குமாா் (திருநெல்வேலி), நளினி (சங்கரன்கோவில்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com