வாசுதேவநல்லூா் பாலிடெக்னிக்கில் விழிப்புணா்வு முகாம்

வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் போஷன் அபியான் திட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் போஷன் அபியான் திட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கல்லூரி நிறுவனா் எஸ். தங்கப்பழம் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் எஸ்.டி. முருகேசன் முகாமைத் தொடக்கிவைத்தாா். முதல்வா் இரா. தமிழ்வீரன் முன்னிலை வகித்தாா். முகாமில், 15 முதல்45 வயது வரையிலான பெண்கள் அனீமியா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுதல், ஊட்டச்சத்தின் நன்மைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலா் கே. சாந்தி சரவணபாய், சத்துணவுத் திட்ட மருத்துவா் திவ்யா, சத்துணவுத் திட்ட அலுவலா் கனகவள்ளி ஆகியோா் பேசினா்.

இதில், மாணவா்- மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை, கல்லூரி என்.எஸ்.எஸ். அலுவலா் ஆா். குருபிரசாத், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com