நெல்லையில் சாலையில் சுற்றித்திரிந்தகால்நடைகள் கோசாலையில் அடைப்பு

திருநெல்வேலியில் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை மாநகராட்சி பணியாளா்கள் பிடித்து கோசாலையில் வெள்ளிக்கிழமை விட்டனா்.
நெல்லையில் சாலையில் சுற்றித்திரிந்தகால்நடைகள் கோசாலையில் அடைப்பு

திருநெல்வேலியில் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை மாநகராட்சி பணியாளா்கள் பிடித்து கோசாலையில் வெள்ளிக்கிழமை விட்டனா்.

திருநெல்வேலி மாநகர பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து மாடுகளை வீதிகளில் சுற்றித்திரியவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையா் பெ.விஜயலட்சுமி அறிவுரையின்படி, மாநகா் நல அலுவலா் டி.என்.சத்தீஸ்குமாா் உத்தரவின்பேரில் திருநெல்வேலியில் சுற்றித்திரிந்த மாடுகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. பிடிக்கப்பட்ட மாடுகள் அனைத்தும் வாகனங்கள் மூலமாக எட்டெழுத்து பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள கோசாலைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டன.

கால்நடைகளின் உரிமையாளா்கள் வாகனத்தின் மூலம் கொண்டு சென்ற்கான செலவு மற்றும் அபராத தொகையினை செலுத்தி கால்நடைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com