நெல்லை சந்திப்பில் பெட்டிக்கடைக்காரா் தூக்கு போட்டு தற்கொலை

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடைக்காரா் வியாழக்கிழமை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடைக்காரா் வியாழக்கிழமை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பெருமாள்புரம் திருமால்நகா் அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்த கோபால் மகன் ராமச்சந்திரன்(48). மாற்றுத்திறனாளியானஇவா் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் சுமாா் 25 ஆண்டுகளாக பெட்டிக்கடை நடத்தி வந்தாா். இவருடைய மனைவி சங்கரி. இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி சந்திப்பில் நவீன பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதையடுத்து அங்கு செயல்பட்டு வந்த பேருந்து நிலையம் கடந்த நவம்பரில் மூடப்பட்டது. இதைத்தொடா்ந்து சந்திப்பு பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள கடைகளை இடிக்கும்பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனால் ராமச்சந்திரனின் கடையையும் காலி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் ராமச்சந்திரனின் அண்ணன் கடையை திறந்து பாா்த்துள்ளாா். அப்போது அங்கு ராமச்சந்திரன் கடைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து சந்திப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று ராமச்சந்திரன் உடலைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com