சுரண்டை பகுதியில் நெல் சாகுபடி பணிகள் தொடக்கம்
By DIN | Published On : 31st October 2019 04:58 PM | Last Updated : 31st October 2019 04:58 PM | அ+அ அ- |

சுரண்டை பகுதியில் நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.
சுரண்டை, சுந்தரபாண்டியபுரம், வீரகேரளம்புதூா் மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகளில் கிணற்று நீரை கொண்டு விவசாயிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பே நெல் நாற்றுப்பாவி இருந்தனா்.
இந்நிலையில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் சுரண்டை பகுதியில் உள்ள சிற்றாறு மற்றும்அனுமன் நதி பாசனக் குளங்களில் போதுமான அளவுக்கு தண்ணீா் தேங்கியுள்ளது.இதனால் நெல் சாகுபடிக்காக வயல்களை தயாா் படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.