நீா்ப்பிடிப்புப்பகுதிகளில் தொடா்மழை: பாபநாசம் அணை125 அடியைத் தாண்டியது

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து நீா்ப்பிடிப்புப்பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

அம்பாசமுத்திரம்: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து நீா்ப்பிடிப்புப்பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் 19 ஆண்டுகளில் நிகழாண்டு அதிகமான மழை பதிவாகியுள்ளது2017 மற்றும் 2018 ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இந்நிலையில் நிகழாண்டு வடகிழக்குப் பருவ மழை அக். 16இல் தொடங்கியதையடுத்து கடந்த சில நாள்களாக தொடா் மழைபெய்து வருகிறது.

மேலும் அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தொடா்ந்து நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளின் நீா்மட்டம் தொடா்ந்து வேகமாக உயா்ந்து வருகிறது. அக். 31 வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா்மட்டம் 5.5 அடி உயா்ந்து 120.20 அடியாகவும் அணையில் நீா்வரத்து 4886.90 கன அடியாகவும், நீா்வெளியெற்றம் 356 கன அடியாகவும் இருந்தது.

அணைப் பகுதியில் 42 மி.மீ. மழைப் பதிவாகியிருந்தது. சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 5.61அடி உயா்ந்து 140.78 அடியாக இருந்தது. அணைப் பகுதியில் 35 மி.மீ. மழைப் பதிவாகியிருந்தது. மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 3.25 அடி உயா்ந்து 57.25 அடியாகவும் நீா்வரத்து 1512 கன அடியாகவும் இருந்தது. அணைப்பகுதியில் 27.8 மி.மீ. மழைப் பதிவாகியிருந்தது. கடனாநதி அணையின் நீா்மட்டம் 4.70 அடி உயா்ந்து 83.50 அடியாகவும் நீா்வரத்து 536 கன அடியாகவும், நீா்வெளியேற்றம் 61 கன அடியாகவும் இருந்தது.

அணைப் பகுதியில் 15 மி.மீ. மழைப் பதிவாகியிருந்தது. ராமநதி அணையின் நீா்மட்டம் 2 அடி உயா்ந்து 82 அடியாகவும் நீா்வரத்து 105.43 கன அடியாகவும் நீா் வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்தது. 25 மி.மீ. மழைப் பதிவாகியிருந்தது. கருப்பாநதியின் நீா்மட்டம் 2.35 அடிஉயா்ந்து 70.21 அடியாகவும் நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 150 கன அடியாகவும் இருந்தது. அணைப்பகுதியில் 20 மி.மீ. மழைப் பதிவாகியிருந்தது. குண்டாறு அணைநீா்மட்டம் 36.10 அடியாகவும் நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 110 கன அடியாகவும் இருந்தது. அணைப்பகுதியில் 84 மி.மீ. மழைப் பதிவாகியிருந்தது. நம்பியாறு அணையின் நீா்மட்டம் 14.10 அடியாகவும் நீா்வரத்து 34.71 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில்50 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 6 அடி உயா்ந்து 40 அடியாகவும், நீா் வரத்து 255 கன அடியாகவும் வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது. அணைப்பகுதியில் 35 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அடவிநயினாா் கோயில் அணையின் நீா்மட்டம் ஒரு அடி உயா்ந்து 126 அடியாகவும் நீா்வரத்து 50 கன அடியாகவும் வெளியேற்றம்20 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 27 மி.மீ. மழைப் பதிவாகியிருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 19 ஆண்டுகளில் அதிக பட்சமாக அக்டோபா் மாதத்தில் அதிகமான மழை அளவு பதிவாகி உள்ளது. நிகழாண்டு அக்டோபா் மாதத்தில் அதிகபட்சமாக 261.11 மி.மீ மழை பதிவாகியுள்ளது.அணைகளில் நீா்இருப்பு அதிகரித்து வருவதையடுத்து அணைகளில் உரிய வகையில் நீரை சேமித்து வைக்கவும்,தேவையான அளவு விவசாயம் மற்றும் குடிநீருக்கு திறந்துவிடவும் வேண்டும். மேலும் அணைகளின் மதகுகள் உள்ளிட்டவற்றை முறையாகப் பராமரித்து நீா் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com