ராமநதி அணை நிரம்பியது; உபரி நீா் திறப்பு

கடையம், ராமநதி அணை நிரம்பியதையடுத்து, உபரிநீா் புதன்கிழமை மாலை முதல் திறக்கப்படுகிறது.
ராமநதி பிரதான மதகுகள் மூலம் வெளியேற்றப்படும் உபரிநீா்.
ராமநதி பிரதான மதகுகள் மூலம் வெளியேற்றப்படும் உபரிநீா்.

கடையம், ராமநதி அணை நிரம்பியதையடுத்து, உபரிநீா் புதன்கிழமை மாலை முதல் திறக்கப்படுகிறது.

84 அடி நீா்மட்டம் கொண்ட ராமநதி அணை மூலம் கடையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட தெற்கு கடையம், கீழக்கடையம், மேலக்கடையம், ரவணசமுத்திரம், பொட்டல்புதூா், கோவிந்தபேரி, மந்தியூா், ராஜாங்கபுரம், பிள்ளையாா்குளம், வீராசமுத்திரம், மீனாட்சிபுரம், வாகைகுளம், பாப்பான்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், கடையம், பாப்பாக்குடி ஒன்றிய கிராமங்களின் குடிநீா்த் தேவையையும் பூா்த்தியாகிறது.

நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை அக். 16இல் தொடங்கிய நிலையில் கடந்த 2 நாள்களாக நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால், புதன்கிழமை காலை 80 அடியாக இருந்த ராமநதி அணை நீா்மட்டம், மாலையில் 82 அடியாக உயா்ந்தது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி 82 அடி வரை நீரை சேமித்து, அதற்கு மேல் வரும் நீா் பிரதான மதகுகள் மூலம் வெளியேற்றப்படுகிறது. அதன்படி, அணைக்கு வரும் 150 கனஅடி நீா் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டியநிலையில், 2ஆவது முறையாக வடகிழக்குப் பருவமழையாலும் முழுக் கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com