ஆலங்குளம் அருகே நாய்கள் கடித்து 4 மான்கள் பலி

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த மான்களை நாய்கள் கடித்துக் குதறியதில் 4 மான்கள் உயிரிழந்தன.

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த மான்களை நாய்கள் கடித்துக் குதறியதில் 4 மான்கள் உயிரிழந்தன.
சுப்பையாபுரம் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு கூட்டமாக இரை தேடியும், தண்ணீர் தேடியும் மான்கள் நெட்டூர், வடக்கு கிடாரகுளம் கிராமங்களுக்குள் வந்துள்ளன. அவ்வாறு, வடக்கு கிடாரகுளம் பகுதிக்கு கூட்டமாக வந்த 7 மான்களை 40-க்கும் அதிகமான நாய்கள் சுற்றிவளைத்து கடித்துக்குதறின.
சப்தம் கேட்டு வந்த கிராம மக்கள், நாய்களிடம் இருந்து மான்களை மீட்கப் போராடினர். எனினும், 3 மான்கள் அந்த இடத்திலேயே இறந்தன. தப்பியோடிய 4 மான்களை நாய்கள் விரட்டிச் சென்று வீராணம் அருகே ஒரு மானை கடித்துக்கொன்றன.
தகவல் அறிந்து வனக் காப்பாளர்கள் கோவில்பாண்டி, தசரதராமன் ஆகியோர் சென்று இறந்த மான்களை கைப்பற்றினர். கால்நடை மருத்துவர்கள் ராம்செல்வம், சந்திரன் ஆகியோர் இறந்த மான்களை பரிசோதனை செய்தனர். இதில், 3 கர்ப்பிணி மான்கள் என தெரியவந்தது. 
 மலைப் பகுதிகளில் மான்கள் தண்ணீர் குடிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள தொட்டிகளைப் பராமரித்து தண்ணீர் நிரப்பி வைத்தால், இதுபோல மான்கள் ஊருக்குள் வந்து உயிரிழப்பதைத் தவிர்க்கலாம் என்பதோடு, மான்கள் விவசாய நிலங்களை பாழாக்குவதையும் தடுக்கலாம் என விவசாயிகள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com