குற்றாலத்தில் மாவட்ட வர்த்தக கழகப் பொதுக்குழுக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட வர்த்தக கழகப் பொதுக்குழு கூட்டம் குற்றாலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட வர்த்தக கழகப் பொதுக்குழு கூட்டம் குற்றாலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மீரான் தணிக்கை அறிக்கை வாசித்தார். மாவட்ட துணைச் செயலர் டி. மாணிக்கம் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மார்க்கெட், பேருந்து நிலையங்களில் உள்ள கட்டடங்களை அகற்றி, புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு முன்பு அதிலுள்ள வணிகர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கும், புதிய கட்டடத்தில் முன்னுரிமை வழங்கி கடைகள் ஒதுக்கவும் தமிழக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குற்றாலத்தை இந்திய சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறச் செய்ய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி நகரில் சுற்றுவட்டச் சாலை அமைக்கவேண்டும். செங்கோட்டையிலிருந்து மாயவரம் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த ரயிலை, மீண்டும் இயக்க வேண்டும், செங்கோட்டையிலிருந்து கோவைக்கு புதிதாக ரயில் இயக்கப்பட வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேநீர் கடைகள், உணவகங்கள் நள்ளிரவு 1.30 மணிவரை இயங்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் செயலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன், அருள்இளங்கோ, சோமு, பேரவை மாநில துணைத் தலைவர்கள் சுல்தான்அலாவுதீன், வேம்பு, பெரியபெருமாள், மார்டின், சண்முகையா பாண்டியன், பேரவை மாநில இணைச் செயலர்கள் பிரம்மநாயகம், சில்வர்ராமசாமி, ரசூல்முகம்மது, தெற்கு மாவட்டத் தலைவர் செல்வகுமார், பாவூர்சத்திரம் வணிகர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலர் சாலமோன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com