தெற்குகள்ளிகுளம் கல்லூரியில் வளர் இளம்பருவத்தினருக்கான விழிப்புணர்வு முகாம்

தெற்குகள்ளிகுளம் தெட்சிணமாறநாடார் சங்கக் கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம், சமவாய்ப்பு மையம் ஆகியவை சார்பில் வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்று


தெற்குகள்ளிகுளம் தெட்சிணமாறநாடார் சங்கக் கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம், சமவாய்ப்பு மையம் ஆகியவை சார்பில் வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்று  நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டி.ராஜன் தலைமை வகித்தார். வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சாந்தி,  பாலியல் தொந்தரவு பற்றிய சட்டங்கள்,  குழந்தை திருமணம் குறித்தும் பேசினார்.  முதன்மை காவலர் தீபா  காவலன் எஸ்ஓஎஸ் ஏபிகே குறித்தும் அதை பயன்படுத்தும் விதம் குறித்தும் பேசினார். 
மாணவர்கள் படிப்பின் முக்கியத்துவம் குறித்தும், மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் குடும்ப நல ஆலோசகர் பி.விஜயா பேசினார். 
ஒன் ஸ்டாப் மையத்தின் நிர்வாக அலுவலர் பொன்முத்து 181 உதவி எண்ணின் மூலம் பெறப்படும் சேவைகள் குறித்து விளக்கிப் பேசினார். 
நிகழ்ச்சியில் மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.  பின்னர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஏற்பாடுகளை இளம் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர்கள் பேராசிரியை மு.மேகலா சர்மினி,  த.சாரா ஜெப ஜென்சி, சம வாய்ப்பு அதிகாரி கலைச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com