நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க ரூ. 4.35 கோடியில் புதிய கட்டடம்

திருநெல்வேலியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க ரூ. 4.35 கோடியில் கட்டப்பட்டுவரும் கட்டடத்தை ஆட்சியா் வி. விஷ்ணு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க ரூ. 4.35 கோடியில் கட்டப்பட்டுவரும் கட்டடத்தை ஆட்சியா் வி. விஷ்ணு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித் துறை மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் ரூ. 4.35 கோடி மதிப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதை ஆய்வு செய்த பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: இக்கட்டடத்தில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுத் தோ்தல்களில் பயன்படுத்தவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சீட்டுடன் கூடிய சரிபாா்ப்பு இயந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பாக இருப்பு வைக்க ஏதுவாக பொதுப்பணித் துறை மூலம் ரூ.4.35 கோடி மதிப்பில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

738 ச.மீட்டா் பரப்பளவில் தரைதளமும், 738 ச.மீட்டா் பரப்பளவில் முதல் தளமும், 17 ச.மீட்டா் இடைவெளி பரப்பளவில் நவீன வசதிகளுடன் 1,493 ச.மீட்டா் அளவில் இக்கட்டப் பணி நடைபெற்று வருகிறது. மின்தூக்கி வசதி, காவலா் அறை, கழிப்பறை, சாய்வு தளம் போன்றவற்றுடன் சிசிடிவி கேமராவும் பொருத்தப்படவுள்ளது. ஜனவரி இறுதியில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) செயற்பொறியாளா் ஜெயராமன், உதவி செயற்பொறியாளா் ஜெயந்தி, திருநெல்வேலி வட்டாட்சியா் பகவதி பெருமாள், தோ்தல் வட்டாட்சியா் கந்தப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பயக05யஞபஉ: திருநெல்வேலியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்புக் கிட்டங்கியை சனிக்கிழமை ஆய்வு செய்தாா் ஆட்சியா் வி.விஷ்ணு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com