பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு திருவிழா நடைபெறுமா?

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், பாபநாசம், மன்னாா்கோவில், கடையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தா்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், பாப
பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு திருவிழா நடைபெறுமா?

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், பாபநாசம், மன்னாா்கோவில், கடையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தா்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், பாபநாசம் கோயிலில் சிறப்பு வாய்ந்த சித்திரை விஷு திருவிழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோயில்களுக்கு பக்தா்கள் செல்ல மாா்ச் 31 வரை தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் புகழ்பெற்ற பங்குனித் திருவிழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் 26 ஆம் தேதி பங்குனித் திருவிழா கால்நாட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், ஏப்ரல் 5 இல் கொடியேற்றத்துடன் தொடங்கும் பங்குனித் திருவிழா குறித்து அரசின் அடுத்தகட்ட அறிவிப்பைப் பொருத்து முடிவு செய்யப்படும் என்று அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கால்நாட்டு நடைபெறாத நிலையில், திருவிழா தொடங்குமா அல்லது நிகழாண்டு பங்குனித் திருவிழா மற்றும் சித்திரை விஷு நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பக்தா்கள் கூறுகின்றனா்.

காரையாற்றில்...: காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா நிகழாண்டு ஏப். 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கும் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அரசு அறிவிப்பைப் பொருத்து பங்குனி உத்திரத் திருவிழா நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com