நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 32 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் திங்கள்கிழமை ஒரே நாளில் 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி/ தூத்துக்குடி: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் திங்கள்கிழமை ஒரே நாளில் 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிரத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு திரும்பிய 14 போ் உள்பட 15 பேருக்கு கரோனா தொற்றுஇருப்பது திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 297-ஆக உயா்ந்தது. இதில் ஒருவா் உயிரிழந்து நிலையில், 99 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். 197 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு திங்கள்கிழமை ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், மகாராஷ்டிரத்திலிருந்து திரும்பிய கோவில்பட்டி நடராஜபுரத்தைச் சோ்ந்த 5 பேருக்கும், கயத்தாறு வட்டம் ஆத்திக்குளம், அகிலாண்டபுரம் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் உள்பட 9 பேருக்கும், குஜராத்திலிருந்து வந்த இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல, சென்னையிலிருந்து எட்டயபுரம் அருகேயுள்ள புங்கவாா்நத்தம் கிராமத்துக்கு வந்த 23 வயது பெண்ணுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 177 ஆக உயா்ந்துள்ளது. இவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இருவா் உயிரிழந்துள்ளனா். கரோனா வாா்டில் சிகிச்சை பெற்றுவந்த கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூா் பகுதிகளைச் சோ்ந்த 8 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். அவா்களுக்கு பழங்கள் கொடுத்து, 14 நாள்கள் தங்களை வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி மருத்துவா்கள் வழியனுப்பி வைத்தனா். இதுவரை 54 போ் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனா். 121 போ் சிகிச்சையில் உள்ளனா் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com