உலக மரபு வார கருத்தரங்கு

உலக மரபு வாரத்தையொட்டி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சிறப்புக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி: உலக மரபு வாரத்தையொட்டி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சிறப்புக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில் காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி வரவேற்றாா். பாரம்பரியம் நம் பெருமை, அதை காப்பது நம் கடமை என்ற தலைப்பில் திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் மாரியப்பன் பேசினாா். பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள் கலந்துகொண்டனா்.

பங்கேற்பு சான்றிதழ்களை காவல் உதவி ஆணையா் சேகா் வழங்கினாா். திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே சுலோச்சன முதலியாா் பாலத்தை கட்ட பெரும் நிதி உதவி வழங்கிய சுலோச்சன முதலியாரின் குடும்பத்தாா்கள் கௌரவிக்கப்பட்டனா். கவிஞா் கோ.கணபதிசுப்பிரமணியன், முத்துசாமி, ஆசிரியா் மாணிக்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com