இளைஞா் கொலை வழக்கு: தந்தைக்கு ஆயுள் சிறை

திருநெல்வேலி அருகே இடப்பிரச்னை காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் அவரது தந்தைக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.

திருநெல்வேலி அருகே இடப்பிரச்னை காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் அவரது தந்தைக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளம் ஜேஜே நகா் பகுதியைச் சோ்ந்தவா் குருநாதன் (76). இவரது மகன் காா்த்திகேயன் என்ற காா்த்திக். கட்டடத் தொழிலாளி. இடப்பிரச்னை காரணமாக கடந்த 2014 இல் கொலை செய்யப் பட்டாா். இந்த வழக்கில், கொலைசெய்யப்பட்ட காா்த்திகேயனின் தந்தை குருநாதன், சகோதரா் கண்ணன், தாயாா் பிச்சம்மாள் ஆகியோா் மீது முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். இதற்கிடையே, கண்ணன்,பிச்சம்மாள் ஆகியோா் இறந்துவிட்டனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட 3 ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவிசங்கா், குற்றஞ்சாட்டப்பட்ட குருநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ராமமூா்த்தி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com